பெட்டாலிங் ஜெயா, ஜூலை.27-
நாடு முழுவதும் புகைமூட்டம் கடுமையாகி வரும் நிலையில், காற்று மாசு குறியீடு 200ஐத் தாண்டினால் பள்ளிகளை மூடிவிட்டு தொலைதூரக் கல்வி அல்லது இல்லிருப்பு கல்வி முறைக்கு மாறலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால், இம்முடிவுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த கால அனுபவங்கள் மோசமானவை, வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணிக்க முடியாது, இணையவழி கல்வியின் பலவீனங்கள், இணையத் தொடர்புப் பிரச்சனைகள் தீர்க்கப்படாதது எனப் பெற்றோர்கள் குழுக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மாற்றுத் திட்டங்கள், இலவச முகமூடிகள், வெளிப்புற செயல்பாடுகளுக்குத் தடை என புதிய யோசனைகளையும் அவர்கள் முன்வைக்கின்றனர் என ஃஎப்எம்டி செய்தி வெளியிட்டுள்ளது.








