2023க்கான மலேசியக் கிண்ணம் காற்பந்து போட்டியில் இறுதிச் சுற்றில் ஜொஹோர் டாருல் அணியும் தெரெங்கானு ஃப்சியும் களமிறங்க உள்ளன. இந்த ஆட்டம் புக்கிட் ஜாலில் அரங்கில் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தைக் காண இரசிகளுக்கு 4 வகை டிக்கெட்டுகளை வழக்கம் போல் இரு அணி ஆதரவாளர்களுக்கும் சரி சமமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது என மலேசிய காற்பந்து சம்மேளனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்துவர்ட் ராமலிங்கம் தெரிவித்தார்.
அதன் விலைகள் மாற்றம் செய்யப்படாமல் கடந்த முறை போலவே விலைகள் நிலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
அவர் எப்போது விற்கப்படத் தொடங்கும் என அவவிரு அணிகள் நேரடியாக அறிவிக்கும் என அவர் மேலும் சொன்னார்.







