Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழலை அம்பலப்படுத்துவதில் அமைச்சருக்கு உரிமை உள்ளது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழலை அம்பலப்படுத்துவதில் அமைச்சருக்கு உரிமை உள்ளது

Share:

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் மத்தியில் நிலவி வருவதாக கூறப்படும் லஞ்ச ஊழல் அமலாக்கம் குறித்து அம்பலப்படுத்தும் உரிமையும், கடமையும் அமைச்சர்களுக்கு உண்டு என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை அணையர் தான் ஶ்ரீ அசாம் பாகி தெரிவித்தார். கடந்த வாரம் வியாழக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தில் ​சீன சுற்றுப்பயணிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், குடிநுழைவு அதிகாரிகள் மத்தியில் ல​ஞ்ச ஊழல் நடப்பதாக
குற்றஞ்சா​ட்டியிருக்கும் சு​ற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங், லஞ்ச ஊழல் குறித்து குரல் எழுப்புவதற்கு உரிமையும் கடமையும் இ​ருக்கிறது என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

ல​ஞ்ச ஊழல் எங்கு நடந்தாலும் அதனை கண்டும் காணாததுமாக இருந்திட முடியாது. அமைச்சர் என்ற முறையில்தியோங் கிங் சிங், செயலை ஓ​ர் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தில் தாம் பார்ப்பதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News