Oct 16, 2026
Thisaigal NewsYouTube

36 குழுக்கள் கலந்து கொண்ட மகிழம்பூ வினோட் கிண்ண கால் பந்து போட்டி மகிழம்பூ கால் பந்து குழு வெற்றி பெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
36 குழுக்கள் கலந்து கொண்ட மகிழம்பூ வினோட் கிண்ண கால் பந்து போட்டி மகிழம்பூ கால் பந்து குழு வெற்றி பெற்றது

டிச. 23-

மகிழம்பூ இளைஞர் கால் பந்து சங்க ஏற்பாட்டில் மகிழம்பூ வினோட் கிண்ண கால்பந்துப் போட்டியில் மகிழம்பூ கால் பந்து B குழு வாகை சூடி 10 ஆயிரத்து 50 ரிங்கிட் பரிசை தட்டிச் சென்றது. ஈப்போவில் உள்ள தாமான் டாக்டர் சீனிவாசகம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 21 ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் நாட்டின் பல மாநிலத்தில் இருந்து 36 குழுக்கள் கலந்துக்கொண்டன.

வெற்றிப் பெற்றவர்களுக்கு வினோட் சகோதரி திருமதி ரேனுவும் அவரது கணவர் மதனும் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

நான்காவது ஆண்டாக நடைபெற்ற மகிழம்பூ வினோட் கால் பந்து கிண்ண கால் பந்துப் போட்டி கனத்த மழைக்கு மத்தியில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்போடியை மகிழம்பூ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சாவ் கம் பூன் இப்போட்டியை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்ததுடன் இங்கு சிறப்பான முறையில் நடைபெற்ற இப்போட்டிக்கு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்

இப்போட்டிக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தாண்டு வெளிநாடுகளில் இருந்து குழுக்கள் இப்போட்டியில் கலத்துக்கொள்ள திட்டங்கள் வகுத்து வருவதாக மகிழம்பூ இளைஞர் கால் பந்து சங்க செயலாளர் தேவேயதிரன் சிவலிங்கம் தெரிவித்தார்

இப்போட்டியில் இண்டாவது நிலையில் OPIB கால் பந்து குழுவும் மூன்றாவது நிலையில் ,dream A குழுவும் வெற்றி பெற்று முறையே 5 ஆயிரம் ரிங்கிட்டையும் 2,500 ரிங்கிட்டையும் பரிசுத் தொகையாகப் பெற்றனர்.

மகிழம்பூ அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மான் ஆலயத் தலைவர் அழகர்சாமி பந்தை உதைத்து முத ஆட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வினோட்டின் தாயார் திருமதி அமுத ராணிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன் இப்போட்டியில் பங்கேற்ற குழுக்கள் சிறப்பான முறையில் விளையாடி தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டதுடன் இப்போட்டி விளையாட்டு சிறப்புடன் நடைபெற நன்கொடை வழங்கி ஆதரவு வழங்கிய அனைவருக்கும் , சங்க உறுப்பினர்கள் , மற்றும் விளையாட்டாளர்கள் அனைவருக்கும் தேவேந்திரன் நன்றியை கூறிக்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்