கோத்தா பாரு, செப்டம்பர்.07-
சமூக வலைத்தளங்கள் மூலம் நீதிமன்ற சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் செயல் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், மாணவி ஸாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியமளித்த நோயியல் வல்லுநர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூவுக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தை நாட்டின் சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முகமட் டுசுகி மொக்தார் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
சாட்சிகளை மிரட்டுவது நீதித்துறைக்கு சவால் விடுக்கும் செயல் என்றும், இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். அச்சுறுத்தல் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








