Sep 29, 2026
Thisaigal NewsYouTube
பத்து ஃபெரிங்கி காட்டுப் பகுதியில் வழிதவறிய 2 பிரிட்டன் மலையேற்ற வீரர்கள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பத்து ஃபெரிங்கி காட்டுப் பகுதியில் வழிதவறிய 2 பிரிட்டன் மலையேற்ற வீரர்கள் மீட்பு

Share:

பினாங்கு மாநிலம், பத்து ஃபெரிங்கியில் உள்ள அயர்ன் அருவி காட்டுப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழிதவறிய 2 பிரிட்டன் மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

20 வயது பெண்ணும் 60 வயது ஆணும் காணாமல் போனதாக இரவு 8.13 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு கிடைத்தது.

இந்தத் தகவலானது வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்பட்ட நிலையில், அவர்களின் இருப்பிடத்தை அறிந்த மீட்புக் குழுவினர் இருவரையும் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், இருவரும் காயமின்றி பாதுகாப்பாக இருந்த நிலையில், போலீசார் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இரவு 10.40 மணியளவில் மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக மலையிலிருந்து கீழே அழைத்து வரப்பட்டனர்.

Related News