Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எம்ஆர்எஸ்எம் கல்லூரி துழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மேல் முறையீடு செய்ய முடியாது
தற்போதைய செய்திகள்

எம்ஆர்எஸ்எம் கல்லூரி துழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மேல் முறையீடு செய்ய முடியாது

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.19
2024 ஆம் ஆண்டுக்கான எம்ஆரஎஸ்எம் கல்லூரி துழைவுத் தேர்வில் தோல்வி கண்டவர்கள் மேல் முறையீடு செய்ய முடியாது என மாராவின் தலைவர் அஹ்ராஃப் வாஜ்டி டுசுக்கி கூறினார்.

அது எம்ஆர்எஸ்எம் இன் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாகும். அக்கல்லூரியின் மாணவர் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறிருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும் என அவர் விளக்கினார்.

எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தரம் குறித்த விவகாரத்தில் தமது தரப்பு மிகுந்த கவனமாக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

இவ்வாண்டுக்கான எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் பயில வாய்ப்பு வழங்கப்படும் மாணவர்களின் பட்டியலை இன்று இரவு 8.00 மணி தொடங்கி இணையப் பக்கத்தில் சரி பார்க்கலாம் என தமது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

7 நாட்களில் பதில் அளிக்காவிட்டால், குறிப்பிட்ட மாணவர் எம்ஆர்எஸ்எம் வாய்ப்பை நிராகரிப்பதாக பொருள்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த சில மாணவர்களுக்கு எம்ஆர்எஸ்எம் இல் பயிலும் வாய்ப்பு இன்னும் வழங்கப்பட்டிருக்காது. அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

காலி இடங்கள் இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் சாத்தியம் இருப்பதால், மாணவர்கள் நம்பிக்கை இழந்து விட வேண்டாம் எனவும் அஹ்ராஃப் வாஜ்டி டுசுக்கி சொன்னார். கடந்த ஆண்டுகளின் தகவல்கள் அடிப்படையில், 25 முதல் 30 சதவிகித மாணவர்களின் சேர்க்கை காத்திருப்போர் பட்டியலில் இருந்து கிடைத்தவை என அஹ்ராஃப் வாஜ்டி டுசுக்கி சுட்டிக் காட்டினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்