SKSSR எனப்படும் தன்னார்வ முறையில் இல்லத்தரிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து சந்தா செலுத்துபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் தற்போது வரையில் ஒரு இலட்சத்து 97 ஆயிரம் இல்லத்தரசிகள் மட்டுமே இணைந்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டார்.
அவ்வெண்ணிக்கையில், ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 666 பேர் பி40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் சந்தாவை ஈ காசிஹ் திட்டத்தின்கீழ் அரசாங்கமே செலுத்தி விடுவதாகவும் குறிப்பிட்டார்.
எஞ்சிய 30 ஆயிரம் பேர் தன்னார்வ முறையில் சந்தா செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தத் திட்டத்தில் 15 வயது முதக் 50 வயது வரையில் உள்ள இல்லத்தரசிகளும் திருமணம் ஆகத பெண்களும் இணையலாம் எனவும் கூறினார்.
பலருக்கு இன்டத் திட்டத்தால் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்து தெரியவில்லை. இதில் இணைகிறவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட வேண்டும். இத்திட்டத்தில் மனைவுக்குக் கணவரோ அல்லது தாயாருக்குப் பிள்ளைகளோ சந்தா செலுத்தலாம், மாதத்திற்கு குறைந்தது 10 வெள்ளி செலுத்தினால் போதுமானது என்றார் அவர்.
இத்திட்டத்தில் இணைபவர்கள், உள்நாட்டுப் பேரிடரால் ஏற்படும் பாதிப்பு, நிரந்தரமாகச் செயல் இழந்து போகும் நிலை, மருத்துவ வசதிகள் போன்ற் நன்மைகளைப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உட்பட வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் மேலும் சொன்னார்.








