அலோர் காஜா, மாச்சாப் நீர்த்தேக்கம் அருகே சாலையோரத்தில் கிடந்த பீப்பாய் ஒன்றில் சிமெண்டால் மூடப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.40 மணியளவில் நீர்த் தேக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூவர், பீப்பாயின் மேற்பகுதியை வெட்டி பார்த்த போது அதற்குள் சிமெண்டால் மூடப்பட்ட எலும்புகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில், நண்பகல் 12 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் குறைந்தது மூன்று வாரங்களாக அழுகிய நிலையில் இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த உடல் பாகங்களானது மலாக்கா மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.








