Sep 13, 2026
Thisaigal NewsYouTube
புதிய துணை ஐஜிபி நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தகவல்
தற்போதைய செய்திகள்

புதிய துணை ஐஜிபி நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தகவல்

Share:

மலேசியாவின் புதிய துணை போலீஸ் படைத் தலைவர் நியமனம் தொடர்பான அரசியலமைப்பு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்ஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி, போலீஸ் படைத் தலைவர் மற்றும் துணை போலீஸ் படைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான நியமனச் செயல்முறையில், மாட்சிமை தங்கிய மாமன்னரில் கருத்தைப் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக சில பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் போலீஸ் படை ஆணையம் அடுத்தகட்ட செயல்முறைகளை மேற்கொண்டதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.

அதேவேளையில், தாங்கள் ஏற்கனவே பெயர்களைப் பரிந்துரைத்துள்ளதாகவும், அடுத்த சில மணி நேரங்களில் இது அறிவிக்கப்படும் என்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை கூலிமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை Tan Sri ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அப்பதவி காலியாக இருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Related News