கோலாலம்பூர், செப்டம்பர்.13-
கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் வெளியேற்ற நடிவடிக்கையின் போது, காவல்துறை உயர் அதிகாரி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், 7 பேரைப் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அந்த 7 பேரும், 15 முதல் 52 வயது வரையிலானவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கோலாலம்பூர் மாவட்ட காவல்துறைத் தலைமை ஆணையர் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மோதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் சிலரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் 186, 353 மற்றும் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டுள்ளார்.








