Jun 21, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் முதன் முறையாக கோத்தா பாருவிற்குத் தனியாகச் சென்ற இரு இளம் பெண்கள் மாயம்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் முதன் முறையாக கோத்தா பாருவிற்குத் தனியாகச் சென்ற இரு இளம் பெண்கள் மாயம்

Share:

கோத்தா பாரு, ஜூன்.21-

கிளந்தான் மாநிலம் கோத்தா பாருவுக்கு முதல் முறையாக தனியாக சென்ற 15 மற்றும் 16 வயதுடைய இரு இளம் பெண்கள் கடந்த மூன்று நாட்களாக மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதான Nur Kaseh Nalisya Mohd Ramzul Nazrie மற்றும் அவரது 15 வயது உறவினர் Nor Syahzanani ஆகியோர், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கம்போங் பாலோ பகுதியில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு, இ-ஹெய்லிங் சேவையைப் பயன்படுத்தி கோத்தா பாருவுக்குப் பயணம் செய்துள்ளனர்.

அதன் பின்னர் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்கள் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களைத் தேடும் பணியில் மாவட்ட போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரேனும் இது குறித்துத் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை அணுகும் படியும் கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் அஸ்மீர் டாமிரி தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூர் பள்ளிகளில் 179 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய வகுப்பறைகள்:  இவ்வாண்டு இறுதிக்குள் தயார்

சிலாங்கூர் பள்ளிகளில் 179 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய வகுப்பறைகள்: இவ்வாண்டு இறுதிக்குள் தயார்

ஜோகூர், பத்து பகாட் கடற்பகுதியில் லேசான நிலநடுக்கம்: 3.3 ரிக்டர் அளவில் பதிவு!

ஜோகூர், பத்து பகாட் கடற்பகுதியில் லேசான நிலநடுக்கம்: 3.3 ரிக்டர் அளவில் பதிவு!

1.76 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பதுக்கல்: இரு சகோதரர்கள் கைது

1.76 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பதுக்கல்: இரு சகோதரர்கள் கைது

மூவர் பலியான பெக்கான் கோர விபத்து - ஓட்டுநருக்கு ஏற்கனவே 6 போக்குவரத்து சம்மன்கள் உள்ளன

மூவர் பலியான பெக்கான் கோர விபத்து - ஓட்டுநருக்கு ஏற்கனவே 6 போக்குவரத்து சம்மன்கள் உள்ளன

சிரம்பான் பள்ளி மாணவி உயிரிழப்பு: சம்பவத்திற்கு முன்பு கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டதாகத் தகவல்

சிரம்பான் பள்ளி மாணவி உயிரிழப்பு: சம்பவத்திற்கு முன்பு கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டதாகத் தகவல்

ஜப்பானுக்கு யானைகள் இடமாற்றம்: புக்கிட் அமான் சிறப்பு விசாரணை நடத்த சுற்றுச்சூழல் அமைப்பு அவசர கோரிக்கை

ஜப்பானுக்கு யானைகள் இடமாற்றம்: புக்கிட் அமான் சிறப்பு விசாரணை நடத்த சுற்றுச்சூழல் அமைப்பு அவசர கோரிக்கை