Jul 16, 2026
Thisaigal NewsYouTube
மூவர் பலியான பெக்கான் கோர விபத்து - ஓட்டுநருக்கு ஏற்கனவே 6 போக்குவரத்து சம்மன்கள் உள்ளன
தற்போதைய செய்திகள்

மூவர் பலியான பெக்கான் கோர விபத்து - ஓட்டுநருக்கு ஏற்கனவே 6 போக்குவரத்து சம்மன்கள் உள்ளன

Share:

குவாந்தான், ஜூன்,21-

பெக்கான் அருகே நேற்று நிகழ்ந்த மூன்று வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் சம்பந்தப்பட்ட பிக்கப் வாகன ஓட்டுநருக்கு ஏற்கனவே ஆறு போக்குவரத்து சம்மன்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஸைடி மாட் ஸைன் வெளியிட்டுள்ள தகவலில், 31 வயதான அந்த ஓட்டுநர் தற்போது தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப் பொருள் பரிசோதனைக்காக ஓட்டுநரிடமிருந்து ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று, பெக்கான் அருகிலுள்ள குவாந்தான்–செகாமாட் சாலையின் 67-ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News