Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்: போக்குவரத்து கடும் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

Share:

இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டுத் துணை இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா மற்றும் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்களும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடங்களுக்கு விரைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முழுமையான சேத விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Related News