Aug 7, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் RM1.42 மில்லியன் செலவில் மலிவுக் கட்டணத்தில் எலும்பு முறிவு சிகிச்சை மையம்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் RM1.42 மில்லியன் செலவில் மலிவுக் கட்டணத்தில் எலும்பு முறிவு சிகிச்சை மையம்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

Share:

சிரம்பானில் குறைந்த செலவிலான 'ஆக்சிஸ்' எலும்பு முறிவு சிகிச்சை மையம் அமைப்பதற்காக, லிம்கிராஃப்ட் இன்னோவேஷன் நிறுவனத்திற்கு பேங்க் ராக்யாட் 1.42 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஈஸ்வரன் நடராஜன் முன்னெடுக்கும் இம்மையம், சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை கட்டணங்களை 50 விழுக்காடு வரை குறைத்து வழங்கவுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் நீண்ட காலம் காத்திருப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அதிகப்படியான கட்டண சுமைக்கு தீர்வு கிடைக்கும் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று சிரம்பானில் நடைபேற்ற வேட்புமனுத்தாக்கலின் போது. புக்கிட் கெப்பாயாங் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பனைச் சேர்ந்த நிக்கோல் டான் லீ கூனுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த போது ஸ்டீவன் சிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எலும்பு முறிவு சிகிச்சை மையத்திற்கு ஆண்டுக்கு 4 விழுக்காடு என்ற குறைந்த வட்டி விகிதத்தில், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரோபோடிக் மறுவாழ்வு வசதிகளை வாங்குவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

இதனிடையே அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்த இந்த சிகிச்சை மையம், ம் நெகிரி செம்பிலான் மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ வாய்ப்பாக அமையும் என புக்கிட் கெப்பாயாங்கில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் நிக்கோல் டான் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி