ஏழு மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு கடத்தப்பட்ட நபர் ஒருவர், 48 மணிநேரத்திற்குள் போலீஸ் அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷா ஆலம், ஐ-சிட்டி-இல் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டதாக மத்திய போலீஸ் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கடத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக டத்தோ எம். குமார் தெரிவித்தார்.








