Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் பொருளாதாரம் 5.8 விழுக்காடு  வளர்ச்சி: சீர்திருத்தங்கள் தொடரும் எனப் பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

மலேசியப் பொருளாதாரம் 5.8 விழுக்காடு வளர்ச்சி: சீர்திருத்தங்கள் தொடரும் எனப் பிரதமர் அன்வார் உறுதி

Share:

நாட்டின் இரண்டாவது காலாண்டுப் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்ப்பை விட 5.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.‘மடானி’ பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் நாட்டின் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுவதாகப் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மேற்காசியப் போர் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளுக்கு மத்தியிலும், மலேசியாவின் இந்த வளர்ச்சி சிங்கப்பூர் மற்றும் சீனாவின் வளர்ச்சியை முந்தியுள்ளது.

இருப்பினும், மக்கள் மற்றும் சிறு வணிகர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவின உயர்வைக் குறைக்க, வங்கிகள் மூலம் 15 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

மேலும், தகுதி வாய்ந்தவர்களுக்கு ‘புடி மடானி’ மூலம் மானிய விலையிலான எரிபொருள் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும், பொருளாதார அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related News

பாதுகாப்புக்கான சிசிடிவி  செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி

பாதுகாப்புக்கான சிசிடிவி செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை