Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் மகன் கண்முன்னே தந்தையை முதலை இழுத்துச் சென்றது - தேடும் பணி தீவிரம்
தற்போதைய செய்திகள்

சபாவில் மகன் கண்முன்னே தந்தையை முதலை இழுத்துச் சென்றது - தேடும் பணி தீவிரம்

Share:

சபா மாநிலம் கம்போங் பத்து புத்தே பகுதியில், ஆற்றங்கரையில் படகை சுத்தம் செய்து கொண்டிருந்த 57 வயதான ருஸ்லி மார்டின் என்பவரை முதலை ஒன்று தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றது.

இச்சம்பவத்தை அவருடன் இருந்த 19 வயது மகன் நேரில் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.31 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கினாபாத்தாங்கன் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டதாக அதன் தலைவர் சூரியாடி தர்விஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், இருள் சூழ்ந்ததால் இரவு 8.45 மணியளவில் தேடுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News