நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலையொட்டி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், தனது 24 மணி நேர செயல்பாட்டு மையத்தைத் திறந்துள்ளது.
சிரம்பானில் உள்ள அதன் அலுவலகத்தில், நாளை ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை இந்த மையம் இயங்கும். தேர்தல் செயல்பாடுகளில் ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 011-3700 9038 என்ற வாட்ஸ்அப் எண் வழியாகவோ தெரிவிக்கலாம்.
தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எஸ்பிஆர்எம் எச்சரிக்கை விடுத்துள்ளது.








