முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், அடுத்த வாரம் செர்டாங் மருத்துவமனையில் இதயச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக அவரது சிறப்பு அதிகாரி அஹ்மத் லுத்பி அசார், அசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது 72 வயதான நஜிப் ரசாக், எஸ்பிஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அத்துடன் 1எம்டிபி ஊழல் வழக்கில் நீதிமன்றம் விதித்த பதினைந்து ஆண்டுச் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
தற்போது நஜிப்பின் உடல்நிலை சீராகவும், ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியும் இருப்பதாக வாட்ஸ்அப் வழி அவரது அதிகாரி சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்.








