Jul 2, 2026
Thisaigal NewsYouTube
விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!
தற்போதைய செய்திகள்

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

Share:

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருந்த வணிகக் கட்டடம் ஒன்று, அதன் உரிமையாளர் எட்டு மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட நோட்டீஸைப் பின்பற்றத் தவறியதால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

செராஸ், ஜாலான் செனோஹோங் பகுதியில் உணவு வணிகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கட்டடத்தை அகற்றுமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் உரிமையாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தெரு, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர்மன்றம் தெரிவித்துள்ளது.

இடிப்பு நடவடிக்கைக்கு முன்னதாக உரிமையாளர் தனது பொருட்கள் அனைத்தையும் அகற்றிவிட்டதால், அந்த இடத்தை இடித்துச் சுத்தப்படுத்தும் பணிகள் எவ்வித சிரமமுமின்றிச் சுமூகமாக நடந்து முடிந்துள்ளன.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்