May 24, 2026
Thisaigal NewsYouTube
நண்பரைக் கத்தியால் குத்திய ஆடவரைப் போலிஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

நண்பரைக் கத்தியால் குத்திய ஆடவரைப் போலிஸ் தேடி வருகிறது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18-

இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிளைத் திருப்பி கேட்ட நண்பனை நான்கு முறை கத்தியால் குத்தி தப்பி ஓடிய ஆடவருக்குப் போலிஸ் வலைவீசியுள்ளது.

கோலாலம்பூர்,செமென்யிஹ் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை மணி 2.51-க்கு நேர்ந்த அச்சம்பவத்தில் 23 வயது இளைஞர் காயங்களுக்கு இலக்காகி தற்போது காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் மோட்டார் சைக்கிள் தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதலே அச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று போலிஸ் சந்தேகித்திருப்பதாக, காஜாங் போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் கூறியுள்ளார்.

Related News