Sep 28, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

Share:

செராஸ், பத்து 9 போலீஸ் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த 54 வயது ஆடவர் ஒருவர், கதவைத் திறந்த போலீஸ்காரரை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 12.10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், போலீஸ்காரரின் வலது வயிற்றுப் பகுதியில் கத்தி பாய்ந்த போது, அவரது பெல்ட்டில் பட்டு தடுக்கப்பட்டதால் அவர் காயமின்றி தப்பினார்.

பின்னர் போலீஸ்காரருக்கும் சந்தேக நபருக்கும் இடையே போராட்டம் ஏற்பட்ட நிலையில், உதவிக்கு வந்த இரு போலீஸ் அதிகாரிகள் அந்நபரை மடக்கிப் பிடித்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் இரு உள்ளங்கைகளிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரிடமிருந்து சுமார் 20 செ.மீ. நீளமுள்ள கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகின்றது.

மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை என்பதும், போலீஸாரால் தேடப்பட்ட நபராக அவர் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்

பள்ளிகளில் பகடிவதையைத் தடுக்க ஒரே நடைமுறை தேவை - பி.கமலநாதன் வலியுறுத்து

பள்ளிகளில் பகடிவதையைத் தடுக்க ஒரே நடைமுறை தேவை - பி.கமலநாதன் வலியுறுத்து