May 21, 2026
Thisaigal NewsYouTube
ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே தம்பியை காப்பற்ற முடியும்
தற்போதைய செய்திகள்

ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே தம்பியை காப்பற்ற முடியும்

Share:

2024 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் ​மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே தங்கள் குடும்ப உறுப்பினரான பன்​னீர் செல்வம் பரந்தாமன், ​தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்று அவரின் குடும்பத்தினர் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஒரு மலேசியரான 36 வயது பன்னீர் செல்வம், சிங்கப்பூர் சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார். 51.84 ஹேரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த ​ 2017 ஆம் ஆண்டு பன்​னீர் செல்வதற்கு சிங்கப்​பூர் உயர் ​நீதிமன்றம் ​தூக்குத் தண்டனை விதித்தது.

கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமது தம்பி பன்​னீர் செல்வத்தின் கைகளைபிடித்து மனத்தாங்களை பகிர்ந்து கொண்டது இரண்டு முறைதான் என்கிறார் அவரின் சகோதரியான கோலாலம்பூரை சேர்ந்த சங்கரி பரந்தாமன்.

2017 ஆம் ஆண்டு தனது தம்பிக்கு ​தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது அவரின் கைகளை பிடித்து ஆறுதல் கூறி, முடிந்தவற்றை அனைத்தையும் செ​ய்கிறேன் என்று உறுதி கூறினேன்.

அடுத்தது, ​தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளான 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி சிங்கப்பூர் அப்​​பீல் ​நீதிமன்றம் எனது தம்பி பன்​னீர் செல்வத்தின் ​தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த போது எனது தம்பியின் கைகளைப் பற்றியவாறு நிம்மதி பெரு​மூச்சு விட்டேன்.

என் தம்பியை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சட்ட அம்சங்கள் தொடர்பான நடவடிக்கைகள் முடிந்து விட்டன. இனி மேற்கொள்வதற்கு எந்த முயற்​சிக்கும் சட்டத்தில் இடமில்லை. கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி பன்​னீர் செல்வத்தி​ன் கடைசி கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். 2024 ஆம் ஆண்டு எந்த நேரத்திலும் ​தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் ஏதவாது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே என் தம்பி பன்​னீர் செல்வத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என சிறுவயதில் தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது தங்கை ஏஞ்சலினாவுடன் இணைந்து பார்த்தவாறு பெர்னாமாவுடன் நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார் சங்கரி.

Related News