Jan 9, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் இராணுவத் தளபதியைத் தொடர்ந்து அவரது இரு மனைவிகளும் கைது
தற்போதைய செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதியைத் தொடர்ந்து அவரது இரு மனைவிகளும் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.08-

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் Tan Sri Muhammad Hafizuddeain Jantan, லஞ்ச ஊழல் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது இரு மனைவிகளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் மலேசிய இராணுவத்தின் கொள்முதல் டெண்டர்கள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இது தொடர்பாக மற்றொரு தம்பதியும் கைது செய்யப்பட்டு, 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, முன்னாள் இராணுவத் தளபதியும், அவரது மனைவிகளும், இன்று புத்ராஜெயா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்.

இராணுவ கொள்முதல்களுக்கான டெண்டர்களை நிர்ணயிப்பதற்காக, ஒரு கூட்டமைப்பாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 17 நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக, 5 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவுகளை கடந்த ஜனவரி 6-ஆம் தேதி எஸ்பிஆர்எம் அதிகாரிகள் பெற்றனர்.

20 முதல் 60 வயதிற்குட்பட்ட 9 ஆண்களும், 8 பெண்களும், எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்த பிறகு கைது செய்யப்பட்டனர்.

Related News