Jul 29, 2026
Thisaigal NewsYouTube
HRD Corp. தலைமை அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

HRD Corp. தலைமை அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா, ஜூலை 09-

லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவை நிகழ்ந்து இருப்பதாக கூறப்படும் மனித வள அமைச்சின் / மனித வள மேம்பாட்டுக்கழகமான HRD Corp. நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமீத் ஷைக் டவுட் இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

HRD Corp. நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பாசீர் கூடாங் பி கே ஆர் எம்.பி. ஹசன் கரீம், இன்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட ஹசன் கரீம், தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மனித வள அமைச்சினால் தொடங்கப்பட்டுள்ள HRD Corp. தனது உன்னத நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றார்.

எனவே தற்போது HRD Corp. தலைமை செயல்முறை அதிகாரியாக பொறுப்பில் இருக்கும் ஷாகுல் ஹமீத் ஷைக் டவுட் இடை நீக்கம் செய்யப்படுவதை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதி செய்ய வேண்டும் என்று ஹசன் கரீம் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட தலைமை செயல்முறை அதிகாரி HRD Corp.பில் இரண்டு முக்கியப் பொறுப்பை வகித்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வாரியத்திலும், முதலீட்டுக் குழுவிலும் அதே நபர் பொறுப்பில் இருந்துள்ளார் என்று ஹசன் கரீம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்