Oct 11, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி பெயருக்கு முக்கியத்துவம்: கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரியத்தில் இவ்விவகாரம் எழுப்பப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி பெயருக்கு முக்கியத்துவம்: கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரியத்தில் இவ்விவகாரம் எழுப்பப்படும்

கோலாலம்பூர், பிரிக்ஃபில்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் கோலாலம்பூர் மாநகர மன்றம் வெளியிட்ட விளம்பரங்களில் “Deepavali”க்கு பதிலாக “Diwali” சொல்லைப் பயன்படுத்தியது தொடர்பாகத் தமிழ்ச் சமூகத்தினர் மற்றும் இந்தியச் சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ள அதிருப்தி குறித்து, கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அந்த வாரியத்தின் உறுப்பினர் தியாகராஜ் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வெறும் சொல் பயன்பாடு தொடர்பானது மட்டுமல்ல; தமிழர்களின் கலாசார அடையாளம், உணர்வுகள் மற்றும் மரியாதையையும் உள்ளடக்கியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை அடுத்த வாரம் நடைபெறவுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரியக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக எழுப்பி, கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டாரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப் போவதாக தியாகராஜ் உறுதியளித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் எந்தத் தரப்பையும் குறை கூறுவது தமது நோக்கமல்ல என்றும், சமூகத்தின் குரல் செவிமடுக்கப்பட்டு, கலாசார அடையாளத்தையும் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →