Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மஇகா தொடர்ந்து அவமானப்படுவதை விட விலக வேண்டும்
தற்போதைய செய்திகள்

மஇகா தொடர்ந்து அவமானப்படுவதை விட விலக வேண்டும்

Share:

ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர்ந்து அவமானப்படுவதைவிட பாரிசான் நேஷனலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மஇகா சிலாங்கூர் மாநில தகவல் பிரிவுத் தலைவர் பி.ஏ. அவ்தார் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாட்டில் உரையாற்றுவதற்கு மஇகாவிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து மாநாட்டிற்கு தலைமையேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்ஜாஹிட் ஆகியோரை கடுமையாக விமர்சித்து அவ்தார் சிங் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார்.

மாநாட்டில் ம.சீ.ச. உட்பட யார் யாருக்கோ உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மஇகாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை, இதுதான் ஒற்றுமை அரசாங்கமா? என்று மஇகா பூச்சோங் தொகுதி தலைவருமான அவ்தார் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஇகாவை, சாலையோரத்தில் சுற்றித் திரியும் நாய்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? என்று பொங்கி எழுந்த அவ்தார் சிங், இப்படி அவமானப்பட்டு கொண்டு இருப்பதைவிட மஇகாவை ஒரேடியாக வெளியேற்றி விடுவீர் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில் பாரிசான் நேஷனலிருந்து விலகு குறித்தும் கட்சியின் தலைமை பரிசீலிக்க வேண்டும் என்ற அவ்தார் சிங் கேட்டுக்கொண்டார்.

Related News