நாட்டின் 69 ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
ஆகஸ்ட் 30ஆம் தேதி கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறும் மெர்டேக்கா முன்தினக் கொண்டாட்டத்தையும், ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெறும் தேசிய தின விழாவையும் முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
புத்ராஜெயாவில் 2,357 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், சுமார் 80 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை புத்ராஜெயாவின் எட்டு முக்கிய சாலைகள் மூடப்படும்.
இதற்கிடையில், அனுமதியின்றி ட்ரோன் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








