Sep 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இந்திய தொழில்முனைவோருக்கு நிதி வாய்ப்புகள் – பூச்சோங்கில் சிறப்பு விளக்க நிகழ்ச்சி

Share:

பூச்சோங் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு அரசாங்க நிதியுதவித் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் சிறப்பு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி சனிக்கிழமை பூச்சோங்கில் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பூச்சோங், 14 ஆவது மைல், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள பூச்சோங் கன்வென்ஷன் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் ஆகியோர் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிகின்றனர்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் அமானா இக்தியார் மலேசியா, பேங்க் ராக்யாட், தெக்குன் நேஷனல், மலேசிய கூட்டுறவு ஆணையம் மற்றும் எஸ்.எம்.இ வங்கி உள்ளிட்ட அமைப்புகள் தொழில் நிதியுதவி, விண்ணப்ப வழிகாட்டுதல் மற்றும் வர்த்தக மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து நேரடி ஆலோசனைகளை வழங்கவுள்ளன.

தொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே தொழில் நடத்தி வருவோரும் இந்த இலவச நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து