Aug 25, 2026
Thisaigal NewsYouTube
காயமடைந்த யானை மீண்டும் மீண்டும் நெடுஞ்சாலைக்கு வருகை
தற்போதைய செய்திகள்

காயமடைந்த யானை மீண்டும் மீண்டும் நெடுஞ்சாலைக்கு வருகை

Share:

பேரா வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையினர் காட்டுக்குள் விரட்ட முயன்றபோதிலும், காயமடைந்த காட்டு யானை ஒன்று மீண்டும் மீண்டும் கிரீக், கிழக்கு–மேற்கு நெடுஞ்சாலைக்கு திரும்பி வருவதால் அந்த யாணை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் கிரீக் நெடுஞ்சாலை பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் யானையின் வலது முன்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும், யானை நல்ல உடல் நிலையில் இருப்பதுடன், வழக்கம்போல் உணவருந்தி நடமாடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் முயற்ற போதிலும், அது மீண்டும் நெடுஞ்சாலைக்கே திரும்புவதாக பேரா மாநில வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரீக்–தித்திவாங்சா சாலையில் ஓய்வு மையம் அருகே செல்லும் வாகன ஓட்டுநர்கள், வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும், யானையை படம் பிடிக்க வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related News