Aug 25, 2026
Thisaigal NewsYouTube
வரிசையை முந்திய கார் ஓட்டுநர்கள் – மழையிலும் இறங்கி தடுத்த பேருந்து ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

வரிசையை முந்திய கார் ஓட்டுநர்கள் – மழையிலும் இறங்கி தடுத்த பேருந்து ஓட்டுநர்

Share:

ஜோகூர்–சிங்கப்பூர் காஸ்வே சாலையில் வரிசையை முந்திச் செல்ல முயன்ற கார் ஓட்டுநர்களை, கனமழையிலும் பேருந்தில் இருந்து இறங்கி எதிர்கொண்ட ஓட்டுநரின் செயல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேக பாதையை சில வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி, மற்ற வாகனங்களை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர், பேருந்தில் இருந்து இறங்கி ஒரு காரின் ஓட்டுநரிடம் சென்று, அந்தப் பாதை பேருந்துகளுக்கானது என்பதை சைகை மூலம் நினைவூட்டினார்.

அவரது துணிச்சலான செயலைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகள் கைதட்டி பாராட்டினர்.

ஆகஸ்ட் 20ஆம் தேதி வைரலான இந்தக் காணொளி, சமூக ஊடகங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Related News