Aug 25, 2026
Thisaigal NewsYouTube
புதிய தலைமுறை மைக்காட் மாற்றம்: நாடு முழுவதும் சேவையில் தற்காலிக பாதிப்பு
தற்போதைய செய்திகள்

புதிய தலைமுறை மைக்காட் மாற்றம்: நாடு முழுவதும் சேவையில் தற்காலிக பாதிப்பு

Share:

தற்போதைய மைக்காட் அடையாள அட்டையிலிருந்து புதிய தலைமுறை அடையாள அட்டைக்கு மாறும் பணிகள் காரணமாக, நாடு முழுவதும் மைக்காட் அச்சிடும் சேவையில் நாளை ஆகஸ்ட் 26 முதல் 31ஆம் தேதி வரை தற்காலிக பாதிப்பு ஏற்படும் என தேசியப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

அவசரத் தேவை இல்லாதவர்கள், இந்தக் காலகட்டத்தில் மைக்காட் மாற்றம் அல்லது புதுப்பிப்புக்கான விண்ணப்பங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 வயது குழந்தைகளுக்கான முதல் மைக்காட் விண்ணப்பத்தையும் சிறிது காலம் தாமதப்படுத்துமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமுறை மைக்காட் வழங்கப்படும் என தேசியப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாற்றப் பணிகளால் ஏற்படக்கூடிய சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பதிவுத்துறை, பொதுமக்களின் ஒத்துழைப்பையும் பொறுமையையும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News