Aug 25, 2026
Thisaigal NewsYouTube
நாரா’ புயல் எச்சரிக்கை – பல மாநிலங்களில் இடியுடன் கனமழை
தற்போதைய செய்திகள்

நாரா’ புயல் எச்சரிக்கை – பல மாநிலங்களில் இடியுடன் கனமழை

Share:

‘நாரா’ வெப்பமண்டலப் புயல் தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளந்தான், தும்பாட்டிலிருந்து வடகிழக்கே சுமார் 1,630 கிலோமீட்டர் தொலைவில் மணிக்கு 19 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கு நோக்கி நகரும் இந்தப் புயல், மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசி வருகிறது.

இதுவரை மலேசியாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளந்தான் முழுவதும், பேராக், திரெங்கானு, பகாங், சிலாங்கூர், ஜோகூர் மற்றும் சரவாக், சபாவின் பல மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வானிலை மாற்றங்களை கவனித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News