Sep 12, 2026
Thisaigal NewsYouTube
4 வயது மாணவி மரண விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் – தாயின் காதலர் கைது
தற்போதைய செய்திகள்

4 வயது மாணவி மரண விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் – தாயின் காதலர் கைது

Share:

கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் உயிரிழந்த 14 வயது மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது மூத்த சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் தாயாரின் 51 வயது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சூஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் படிவத்தில் பயின்ற மாணவி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார்.

மாணவியின் மரணம் தொடர்பாக இதுவரை 92 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் திருப்புமுனையாக தாயாரின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளின் மரணத்தில் பள்ளியில் பகடிவதை கூறுகள் இருப்பதாகக் கூறி, மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின்போது, உயிரிழந்த மாணவியின் 15 வயது மூத்த சகோதரிக்கு தாயாரின் காதலன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது. .

இதையடுத்து, சந்தேக நபர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறார்களுக்கு எதிரான 2017 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் அந்த நபருக்கு எதிராக வவிசாரணை நடைபெற்று வருகிறது என்று டத்தோ ஃபடில் மர்சூஸ் தெரிவித்தார்

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்