Sep 7, 2026
Thisaigal NewsYouTube
18 ஆவது கீமோதெரபிக்குப் பிறகும்... கணவரின் பெருமைக்காகத் தளராத மனைவி
தற்போதைய செய்திகள்

18 ஆவது கீமோதெரபிக்குப் பிறகும்... கணவரின் பெருமைக்காகத் தளராத மனைவி

Share:

புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், 18 ஆவது கீமோதெரபி சிகிச்சை முடிந்த மறுநாளே, கணவர் தான் ஸ்ரீ அய்யூப் கான் மைடீன் பிச்சேய் –யின் தேசிய விருதளிப்பு விழாவில் பங்கேற்க தனது உடல் வலியையும் சோர்வையும் மீறி வந்தார் புவான் ஸ்ரீ ஸலீனா முகமது அரிஃபின்.

மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் புவான் ஸ்ரீ ஸலீனா, மருத்துவரின் ஆலோசனையுடன் முகக்கவசம் அணிந்த நிலையில் விழாவில் கலந்து கொண்டார்.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மௌலிதுர் ரசூல் விருதளிப்பு விழாவில் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சைக்கு, தேசிய வீரர் பிரிவில் அனுகேரா தோகோ மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது.

“கணவருக்கு மன உறுதி அளிக்கவே, என்னை நானே தள்ளிக்கொண்டு வந்தேன்” என்ற புவான் ஸ்ரீ ஸலீனாவின் வார்த்தைகள், அவர்களின் மூன்று தசாப்த கால வாழ்க்கைப் பயணத்தின் ஆழமான அன்பை வெளிப்படுத்தின.

கணவர்மீது விமர்சனங்களும் அவதூறுகளும் குவிந்தபோதும், அவற்றை அவரிடம் கூறாமல் தனது மனதுக்குள் தாங்கிக் கொண்டதாகவும் ஸலீனா உருக்கமாக தெரிவித்தார்.

உடல் நோயால் சோர்ந்தாலும், கணவருக்கான அன்பில் தளராத இந்த மனைவியின் உறுதி, அந்த விருது விழாவையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

18ஆவது கீமோதெரபிக்குப் பிறகும்... கணவரின் பெருமைக்காகத் த... | Thisaigal News