Sep 15, 2026
Thisaigal NewsYouTube
புகைமூட்டம் தீவிரம்: வீரர்களின் உடல்நலமே முதன்மை – அமைச்சர் தௌஃபிக் ஜொஹாரி
தற்போதைய செய்திகள்

புகைமூட்டம் தீவிரம்: வீரர்களின் உடல்நலமே முதன்மை – அமைச்சர் தௌஃபிக் ஜொஹாரி

Share:

நாட்டில் அதிகரித்து வரும் புகைமூட்டம் நிலைமையால் விளையாட்டு வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்படாத வகையில், அவர்களின் நலனுக்கே முதலிடம் வழங்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

புகைமூட்டத்தின் தீவிரம் மற்றும் காற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வெளிப்புற பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேசிய வீரர்களின் பயிற்சிகளும் தயாரிப்புகளும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

இன்று சுங்கைப்பட்டாணியில் கெடா மாநில ஊடகத்துறைக் கழக உறுப்பினர்களைச் சந்தித்த அமைச்சர், ஊடகக் கழகத்தின் சமூக நல நடவடிக்கைகளுக்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சார்பில் 30 ஆயிரம் ரிங்கிட் மானியத்தையும் வழங்கினார்.

Related News