Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சன்வே லகூன் விபத்து: 10 வருகையாளர்கள் பாதிப்பு – நிர்வாகம் வருத்தம்
தற்போதைய செய்திகள்

சன்வே லகூன் விபத்து: 10 வருகையாளர்கள் பாதிப்பு – நிர்வாகம் வருத்தம்

Share:

சுபாங் ஜெயா, சன்வே லகூனில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கேளிக்கை சாதனம் ஒன்றில் ஏற்பட்ட சம்பவத்தால் 10 வருகையாளர்கள் பாதிக்கப்பட்டதற்கும், அதானல் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் சான்வே தீம் பார்க்ஸ் நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, மருத்துவத் தேவைகள் மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான மருத்துவ உதவிகளும் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சான்வே தீம் பார்க்ஸ் நிறுவனம், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வருகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நிர்வாகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விரிவான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் சன்வே தீம் பார்க்ஸ் உறுதியளித்துள்ளது.

வருகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே தங்களது முதன்மையான முன்னுரிமை என்றும், அனைத்து கேளிக்கை வசதிகளிலும் உயர்ந்த பாதுகாப்புத் தரநிலைகளைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்