புத்ராஜெயா, அக்டோபர்.19-
மடானி அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா - சாரா உதவியைப் பெறுவதில் உள்ள மைகாட் தொழில்நுட்பச் சிக்கல்களையும், சிலரால் நடைபெறும் அடையாளத் மோசடியையும் சரிசெய்ய உள்துறை அமைச்சு உறுதி பூண்டுள்ளது. தகுதியுடைய எந்தவொரு பயனாளியும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது அடையாளத் தவறால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய, மோசடி நிரூபிக்கப்பட்டால் மானியத் தொகை மீண்டும் உரியோருக்கே வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதியளித்தார். இச்சிக்கல்களைக் களைய, உள்துறை அமைச்சு தேசியப் பதிவுத் துறை – JPN உடன் இணைந்து தரவுகளைப் புதுப்பித்தல், அட்டையின் பாதுகாப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.