புத்ராஜெயா, அக்டோபர்.31-
இன்று வெள்ளிக்கிழமை காலை புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் அனுமதியின்றி ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டதால், அப்பகுதியில் இரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
இன்று காலை 8.41 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், அந்நபரைத் தேடும் நடவடிக்கை உடனடியாகத் துவங்கப்பட்டதாக ரெபிட் கேஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 20 நிமிடங்களுக்குள் அந்நபர் கைது செய்யப்பட்டு, புத்ராஜெயா எம்ஆர்டி லைன் இரயில் சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் ரெபிட் கேஎல் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தினால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ள ரெபிட் கேஎல், பொறுமை காத்த பயணிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.








