Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி
தற்போதைய செய்திகள்

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

Share:

கூலிம் மாவட்டத்திலுள்ள வர்த்தகக் கட்டட நிர்மாணத் தளத்தில் கெடா மாநில குடிநுழைவுத்துறை நேற்று மேற்கொண்ட 'ஒப்ஸ் சாப்பு' அதிரடி சோதனையில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவல் மற்றும் உளவுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில், சரியான ஆவணங்கள் இன்றித் தங்கியிருந்த வங்களாதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக பெலாந்திக் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

Related News