கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-
தேசிய உயர்க்கல்வி நிதியகமாக பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படும் பி40 மற்றும் வறுமையில் உழலும் மாணவர்களின் அந்தக் கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று மக்களவையில் கேட்டுக் கொண்டார்.
வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்விக்கு உதவ அரசாங்கம் ரொக்கத் தொகையை உதவி நிதியாக வழங்குவதைக் காட்டிலும் அவர்களின் நீடித்த சிரமத்தைக் குறைப்பதற்கு பிடிபிடிஎன் போன்ற கடன்களைத் தள்ளுபடி செய்தால் அவர்கள் எதிர்நோக்கும் பெரும் சுமை குறையக்கூடும் என்று ஜூலாவ் எம்.பி.லெர்ரி ஸ்ங் கேட்டுக் கொண்டார்.








