Feb 16, 2026
Thisaigal NewsYouTube
ஆபாசச் செயல் மற்றும் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த பல்கலைக்கழக மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆபாசச் செயல் மற்றும் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த பல்கலைக்கழக மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

பத்து பஹாட், பிப்ரவரி.16-

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது மற்றும் தனது கைபேசியில் 2,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை வைத்திருந்ததாக 24 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

Xyful Naseem Muzzammil Rizuwan என்ற அந்த மாணவர், பத்து பஹாட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அருண் நோவல் டாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி காலை 8 மணியளவில், ஜாலான் பாரிட் செம்பாடான் லாவுட் பகுதியில், 34 வயதுடைய இல்லத்தரசி ஒருவருக்கு முன்னால் வேண்டுமென்றே ஆடைகளைத் துறந்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதே இடத்தில், அவரது கைபேசியில் 1,259 ஆபாச வீடியோக்கள் மற்றும் 1,196 ஆபாசப் படங்களைச் சேமித்து வைத்திருந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து அந்த மாணவர் விசாரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News

1.1 பில்லியன் ரிங்கிட் அரசு ஒப்பந்தம்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

1.1 பில்லியன் ரிங்கிட் அரசு ஒப்பந்தம்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

நிபந்தனைகளுடன் ஹம்ஸா மீண்டும் அம்னோவில் இணையலாம்: புவாட் ஜார்காஷி கூறுகிறார்

நிபந்தனைகளுடன் ஹம்ஸா மீண்டும் அம்னோவில் இணையலாம்: புவாட் ஜார்காஷி கூறுகிறார்

கருத்து வேறுபாடுகள் நம்மைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது: பிரதமர் அன்வார்

கருத்து வேறுபாடுகள் நம்மைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, பிரிக்கக்கூடாது: பிரதமர் அன்வார்

சீனப் புத்தாண்டு: பெரும்பாலான மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சீனப் புத்தாண்டு: பெரும்பாலான மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6.3% முதல் 6.5% வரை இருக்கலாம்: பொருளாதார நிபுணர் கணிப்பு

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6.3% முதல் 6.5% வரை இருக்கலாம்: பொருளாதார நிபுணர் கணிப்பு

அனுமதியற்ற இந்து ஆலயங்களை அகற்ற 6 மாத காலத் தடை கோரிக்கை: தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அரசுக்கு வேண்டுகோள்

அனுமதியற்ற இந்து ஆலயங்களை அகற்ற 6 மாத காலத் தடை கோரிக்கை: தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அரசுக்கு வேண்டுகோள்