ஈப்போ, அக்டோபர்.09-
ஈப்போ, ரயில் நிலையத்திற்கு அருகில் 7 வாகனங்களை மோதித் தள்ளி சேதம் விளைவித்த வேன் ஓட்டுநர் ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
R. விக்னேஸ்வரன் என்ற அந்த வேன் ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அனிஸ் ஹனினி அப்துல்லா மேற்கண்ட அபராதத் தொகையை விதித்தார்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பிற்பகல் 2.54 மணியளவில் கே.டி.எம். ஈப்போ ரயில் நிலையத்தின் அருகில் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதன் விளைவாக 7 வாகனங்களுக்கு சேதம் விளைவித்ததாக விக்னேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.








