Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

Share:

ஈப்போ, ஜூலை.16-

பேராக் மாநிலம் ஈப்போவில் இணைய மோசடி மையங்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இடங்களில் போலீசார் நடத்திய தனித்தனி சோதனைகளில் 18 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 78 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து பேராக் மாநில போலீஸ் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin வெளியிட்டுள்ள தகவலில், கடந்த திங்கட்கிழமை ஈப்போ Hill Permai அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் Taman Tasek Indraவில் Laluan Tasek Timur 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்ட சீன நாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோதனையின் போது, மின்னணு சாதனங்கள், மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை இணைய வழி மோசடிகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும் Mohd Alwi Zainal தெரிவித்துள்ளார்.

Related News

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது