கோத்தா கினபாலு, ஜூலை.16-
சபா மாநிலம், Penampang மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் ஒன்றைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக 13 முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறைத் தலைவர் சாமி நியூட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று புதன்கிழமை Putatan பகுதியில் அம்மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் எந்த சமயத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், சேதப்படுத்தும் செயலில் மட்டுமே ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவமானது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 427 மற்றும் வழிபாட்டுத் தலம் அல்லது புனிதப் பொருளை சேதப்படுத்துதல், அழித்தல் அல்லது அவமதித்தல் பிரிவான 295-ன் கீழ் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.








