Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பி40, எம்40 பிரிவுக்கு விரிவுபடுத்தப்படும் ரென்ட் டு ஓவ்ன்  திட்டம்
தற்போதைய செய்திகள்

பி40, எம்40 பிரிவுக்கு விரிவுபடுத்தப்படும் ரென்ட் டு ஓவ்ன் திட்டம்

Share:

பி40, எம்40 பிரிவு மக்கள் சொந்த வீடு வாங்குவதற்கு ஏதுவாக ரென்ட் டு ஓவ்ன் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்த உள்ளது.

இது குறித்து ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவிக்கயில், நிதி நிறுவனங்களோடு இணைந்து வீட்டை வாங்க வசதியாக நிதித் திட்டங்களை வகுக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெர்பாடானான் ப்ரிமா மலேசியா- ப்ரிமா, ஷாரிக்காட் பெருமாஹான் நெகாரா- எஸ்பிஎன்பி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து எம் 40 பிரிவு மக்களுக்காக கெடியாமான் எஸ்பிஎன்பி , பெருமாஹான் ப்ரிமா ஆகிய வீடமைப்புத் திட்டங்களை ஏற்பாடு செய்துளது.

இது வரையில் கெடியாமான் எஸ்பிஎன்பி திட்டத்தின் கீழ் 28 ஆயிரத்து 583 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 24 வீடுகள் கட்டுமானப் பணியில் உள்ளதாகவும் 531 வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டார்.

ப்ரிமா திட்டத்தின்கீழ், 35 ஆயிரத்து 454 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளையில், 14 ஆயிரத்து 427 வீடுகள் கட்டுமானப் பணியிலும் மூவாயிரத்து 765 வீடுகள் திட்டமிடலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News