Oct 4, 2026
Thisaigal NewsYouTube

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: மலேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என மெட்மலேசியா உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: மலேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என மெட்மலேசியா உறுதி

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

காலை 7.37 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில், மியூலாபோ நகரிலிருந்து சுமார் 59 கிலோமீட்டர் வடகிழக்கே ஏற்பட்டுள்ளது.

இதன் அதிர்வுகள் தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் உணரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் மெட்மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →