Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்கார வழக்கு: 4 நாட்களுக்கு விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்கார வழக்கு: 4 நாட்களுக்கு விசாரணை

ஈப்போ, நவ. 27-


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பேரா, துரோனா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால் யோங், செய்து கொண்ட மேல் முறையீட்டு மனுவில் கூடுதல் ஆ தாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பால் யோங், மேல்முறையீடு தொடர்பாக புதிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இவ்வழக்கு விசாரணை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று ஈப்போ உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த விசாரணையின் போது இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு சாட்சிகள் சாட்சியம் அளிப்பார்கள் என்று பால் யோங் வழக்கறிஞர் டத்தோ ஹிஷாம் தே போ தெய்க் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் ஜனவரி 13,14,21,22 ஆகிய தேதிகளில் புதிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2029 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் தேதி ஈப்போவில் உள்ள தனது வீட்டில் 23 வயது இந்தோனேசியா பணிப்பெண்ணை பாலியல் பலாக்காரம் செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 2 பிரம்படித் தண்டனை ஆகியவற்றை பால் யோங் எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →