ஈப்போ, செப்டம்பர்.09-
பேராக்கில் நேற்று நடுக்கடலில் தீப்பிடித்த படகிலிருந்து, நீரில் குதித்து, 25 மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் பேராக், பந்தாய் ரெமிஸ், ஜாலான் பெலந்தார் அலேப்பில் இருந்து 3.5 கடல் மைல்களுக்கு அப்பால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா கூறுகையில், கடலில் தத்தளித்த அந்த 25 மீனவர்களும் மற்றொரு மீன் பிடிப் படகில் ஏறி பத்திரமாகக் கரையை அடைந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
கிளாஸ் சி பேர்ஸ் செயின் வகையைச் சேர்ந்த அவர்கள் சென்ற படகு, 80 சதவிகிதம் எரிந்து தீக்கிரையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








